ADDED : ஜூலை 07, 2026 04:05 AM

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரண்ட வானிலை நிலவியது. அதேசமயம், நீலகிரி மாவட்டம், கூடலுார் பஜார் பகுதியில், 2.6 செ.மீ., மழை பெய்துள்ளது.
இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், மணிக்கு 40 - 50 கி.மீ., வேக காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில், இயல்பான வெப்ப நிலையை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயரும் வாய்ப்பு உ ள்ளதால், வறண்ட வானிலையே நிலவும்.
அதேசமயம், தமிழகத்தின் ஓரிரு இடங்களி லும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
