ADDED : ஜூலை 07, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
உடுப்பி: உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், நிமிஷா என்ற பெண் வந்தார். கோவிலில் அதிக பக்தர்கள் நெரிசல் இருந்தது. இதை பயன்படுத்தி மர்ம கும்பல், நிமிஷாவின் கைப்பையில் இருந்த 80,000 ரூபாயை கொள்ளை அடித்தது.
இது குறித்து, கொல் லுார் போலீஸ் நிலையத்தில் நிமிஷா புகார் அளித்தார். போலீசாரும் கோவிலில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
இதில் மூன்று பெண்களின் நடவடிக்கை, சந்தேகத்திற்கிடமாக இருந்தது. அவர்களை கண்டுபிடித்து விசாரித்த போது, திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நேத்ராவதி, 30, சாரதா, 28, துர்கம்மா, 30 ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் கோவில்கள் உட்பட பல இடங்களில் திருடியது தெரிந்தது.
