sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 11.50 லட்சம்: நீதிபதிகள் எண்ணிக்கை போதாது என்கிறது நீதித்துறை

/

ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 11.50 லட்சம்: நீதிபதிகள் எண்ணிக்கை போதாது என்கிறது நீதித்துறை

ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 11.50 லட்சம்: நீதிபதிகள் எண்ணிக்கை போதாது என்கிறது நீதித்துறை

ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 11.50 லட்சம்: நீதிபதிகள் எண்ணிக்கை போதாது என்கிறது நீதித்துறை

39


UPDATED : ஆக 31, 2025 02:13 PM

ADDED : ஆக 31, 2025 05:08 AM

Google News

UPDATED : ஆக 31, 2025 02:13 PM ADDED : ஆக 31, 2025 05:08 AM

39


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தால், அடுத்த மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது. லட்சக்கணக்கான வழக்குகள் நம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஒரு விரிவான பார்வை: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திர பிரதாப் சாகி என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த கிரிமினல் வழக்கு, 2008 முதல் நிலுவையில் உள்ளது.

இதன் விசாரணை நீண்ட நாட்கள் நடந்த நிலையில், 2021 டிசம்பர் 24ல், அலகாபாத் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் ஒத்தி வைத்தது. ஆனால், அதன் பின் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, இடைக்கால உத்தரவு கேட்டு சம்பந்தப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வு கடந்த 25ம் தேதி விசாரித்தது.

வழக்கு தொடர்பான விபரங்களை அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டு பெற்றனர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், 'ஒரு வழக்கு விசாரணை முடிந்து இத்தனை ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது' எனக் கூறினர்.

இப்படியான நிலைமை களில் மனுதாரர்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவர் என்றும் வேதனை தெரிவித்தனர்.

வழிகாட்டு நெறிமுறை இதை தொடர்ந்து, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் வெளியிட்டனர்.

அதன் விபரம்:


ஒரு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டாலும், அதிலிருந்து மூன்று மாதத்திற்குள் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்

ஒருவேளை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர், அந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வு முன் பட்டியலிட வேண்டும்

வழக்கை விசாரித்த அமர்விடம், அடுத்த இரண்டு வாரத்தில் தீர்ப்பை வழங்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும்

அதையும் மீறி தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால், மற்றொரு அமர்வு முன் அந்த வழக்கு பட்டியலிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தற்போது கொடுத்துள்ள இதே அறிவுறுத்தல்களை, கடந்த 2001ல், அனில் ராய் மற்றும் பீஹார் மாநில அரசு இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கொடுத்திருக்கிறது.

இவை அனைத்தையும் மீறி இன்றைக்கும், உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகளுக்கான தீர்ப்புகள் ஆண்டு கணக்கில் வழங்கப்படாமல் இருக்கின்றன. அதன் புள்ளி விபரங்கள்:

நீதிபதிகள் பற்றாக்குறை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வழங்கிய எழுத்துப்பூர்வமான புள்ளி விபரங்களின்படி நாடு முழுதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில், 40 முதல் 50 ஆண்டுகள் வரை நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை 22,829.

அதுவே, 30 முதல் 40 ஆண்டுகளாக, 63,239 வழக்குகளும்; 20 முதல் 30 ஆண்டுகளாக, 3.40 லட்சம் வழக்குகளும்; 10 முதல் 20 ஆண்டுகளாக 11.50 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கும், தாமதமாக தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கும் நீதிபதிகளின் பற்றாக்குறை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

உதாரணமாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக இருக்கிறது. 25 உயர் நீதிமன்றங்களின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,114. ஆனால், 770 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 344 பணியிடங்கள் காலியாக உள்ளன.

உயர் நீதிமன்றங்களில் மொத்தமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 62 லட்சத்து, 96,798. இத்தனை வழக்குகளையும் வெறும் 770 நீதிபதிகள் விசாரிக்க வேண்டி உள்ளது.

ஆனால், 'நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகளை வழங்கும் உச்ச நீதிமன்ற, 'கொலீஜியம்' தங்கள் பரிந்துரைகளை மிக தாமதமாக வழங்குவதே இதற்கு காரணம்' என, மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, 'உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 26 பணியிடங்களுக்கு தற்போது வரை பெயர் பரிந்துரைகளை கொலீஜியம் வழங்கவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான வழக்குகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதற்கு மத்திய அரசும், நீதி துறையும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆனால், இதில் உண்மையில் பாதிக்கப்படுவது என்னவோ நீதி கேட்டு வரும் சாமானிய மக்கள் தான்.

'நேரடி உத்தரவு நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும்!'


இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் அளித்த பிரத்யேக பேட்டி: உயர் நீதிமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் இப்படி நேரடியாக தலையிடுவது சரியானது கிடையாது. ஏனென்றால், ஒவ்வொரு உயர் நீதிமன்றங்களும் செயல்படும் தன்மை, அந்தந்த உயர் நீதிமன்றங்களில் பணிபுரியக் கூடிய நீதிபதிகளுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது என்றால், அதை தீர்ப்பதற்கு தான் உயர் நீதிமன்றங் களின் தலைமை நீதிபதிகள் இருக்கின்றனர். வழக்குகள் தேக்கம் அடைவது அல்லது மற்ற விவகாரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் தான் கொடுக்க வேண்டுமே தவிர, வழக்குகள் தொடர்பான உத்தரவுகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரடியாக பிறப்பிக்க கூடாது. அது, தேவையில்லாத நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.



- டில்லி சிறப்பு நிருபர் - '






      Dinamalar
      Follow us