கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு
கடற்பசுக்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு
ADDED : மார் 21, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்,:தஞ்சாவூரில், நேற்று தமிழக வனத்துறை சார்பில், கடற்பசு பாதுகாப்பு குறித்த பயிலரங்கம் நடந்தது.
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் மற்றும் கொள்ளுக்காடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர் குழுவினர், சில மாதங்களுக்கு முன், மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீட்டு, அவற்றை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தலா, 50,000 ரூபாய் என மொத்தம், 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு இக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது.

