தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு 36.7 டி.எம்.சி., நீர் தர காவிரி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம் 36.7 டி.எம்.சி., நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் பிரதிநிதிகளாக, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம், 36.7 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். இந்த நீர் தமிழக எல்லைக்குள் வருவதை, மத்திய அரசின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் உறுதி செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.