'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு
'மாஜி' அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு
ADDED : பிப் 18, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் விஜயநல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர், அதே மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் அக்கா மகன் ஆனந்த், 26 என்பவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, 37 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மூவர் மீதும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராஜேந்திர பாலாஜி, விஜயநல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

