தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ., நிலை அறிக்கை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ., நிலை அறிக்கை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ., நிலை அறிக்கை தாக்கல்


UPDATED : அக் 26, 2026 09:24 PM

ADDED : அக் 26, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 09:24 PM ADDED : அக் 26, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சென்னை பெரம்பூரில், 2024 ஜூலை 5-ல், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணை நிலை குறித்த விரிவான நிலை அறிக்கையை, இரு வாரங்களில் தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், விரிவான நிலை அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்தது. அதன் விபரம்:

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 30 நபர்களில், 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல், சந்தோஷ் ஆகிய, 10 பேர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. மற்றவர்கள், ஆயுதங்கள் வழங்கியது, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது, பண உதவி, வாகன ஏற்பாடு உள்ளிட்ட சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கொலையில் தொடர்புடைய முக்கிய சதிகாரர்களான செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர், நம் நாட்டில் இருந்து தப்பி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன், கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன், பிரதான குற்றவாளியான அருள் மற்றும் திருவேங்கடத்தை சந்தித்து பேசியுள்ளார். அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வங்கி பணப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

குற்றவாளிகளுக்கு இடையேயான நேரடி டிஜிட்டல் தொடர்பை உறுதிப்படுத்தவும், யாரேனும் நாட்டிற்கு வெளியே இருந்து இயங்கினரா என்பதை கண்டறியவும் இணைய தரவுகள், 'வாட்ஸாப்' உரையாடல்கள், டிஜிட்டல் சிம், ஐ.பி., முகவரிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நவ., 3ல் விசாரணைக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us