தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விசாரணைக்கு இன்ஸ்.,சை கஸ்டடி எடுத்த சி.பி.சி.ஐ.டி.,

விசாரணைக்கு இன்ஸ்.,சை கஸ்டடி எடுத்த சி.பி.சி.ஐ.டி.,

விசாரணைக்கு இன்ஸ்.,சை கஸ்டடி எடுத்த சி.பி.சி.ஐ.டி.,


ADDED : அக் 21, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் பிரச்னையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., இன்று கஸ்டடி எடுத்தது.

தஞ்சாவூர், ரகுமான் நகரை சேர்ந்த சரவணன், 37, பங்குதாரருடன் இணைந்து, ‘ஏ டு இசட்’ என்ற மருத்துவமனை நடத்துவதுடன், அதன் இயக்குநராகவும் உள்ளார். சில மாதங்களுக்கு முன், பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் சரவணன், திருச்சி ஐ.ஜி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.

சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், 47, தன் வீட்டில் பங்குதாரர்களை வரவழைத்து, 5 கோடி ரூபாய் வரை பெற்றது உறுதியானது. அக்., 9ல் சுகுமாறன் கைது செய்யப்பட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நெஞ்சு வலிப்பதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுகுமாறன் ஜாமின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அக்., 23 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்கும், திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், இன்ஸ்பெக்டர் சுகுமாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என, இரண்டு நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.ஆக்னஸ் ஜெப கிருபா, 24 மணி நேரம் மட்டும் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us