தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒப்பந்த வாகனங்கள் வேலைநிறுத்தம் 5 நாட்களாக ஆவின் சப்ளை பாதிப்பு

ஒப்பந்த வாகனங்கள் வேலைநிறுத்தம் 5 நாட்களாக ஆவின் சப்ளை பாதிப்பு

ஒப்பந்த வாகனங்கள் வேலைநிறுத்தம் 5 நாட்களாக ஆவின் சப்ளை பாதிப்பு


UPDATED : அக் 21, 2026 08:10 PM

ADDED : அக் 21, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:10 PM ADDED : அக் 21, 2026 08:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஆவின் ஒப்பந்த வாகனங்கள் வேலைநிறுத்தம் காரணமாக, பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகம் ஐந்து நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆவின் நிறுவனம் வாயிலாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 15 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாதவரம், அம்பத்துார், சோழிங்கநல்லுார் பண்ணைகளில், பால் பாக்கெட்டுகள் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.

அம்பத்துார் அடுத்த கருக்கு மேம்பாலத்திற்கு அருகே, ஆவின் பால் பொருட்கள் கிடங்கு உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும் வெண்ணெய், பால் பவுடர், நெய், இனிப்பு, காரம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை, இங்கு பதப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இப்பணியில், 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒப்பந்த வாகனங்களுக்கு, கடந்த 2023ல் நிர்ணயம் செய்யப்பட்டபடி, தினமும் 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வாகன வாடகை, ஆவின் நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது.

இதில், வாகன ஓட்டுனர்களுக்கு 900 ரூபாய் ஒருநாள் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்த வாடகை மற்றும் ஊதியம் கட்டுப்படியாவில்லை எனக்கூறி, ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஐந்தாவது நாளாக பால் பொருட்கள் விற்பனை பாதித்துள்ளது. ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் பனீர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது; பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதிலும், ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை. ஊதா நிற பால் பாக்கெட் மட்டுமே கிடைக்கிறது. இதனால், ஆவின் பாலகங்களுக்கு செல்லும் நுகர்வோர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ஒப்பந்த வாகன வாடகை உயர்வு தொடர்பாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று பேச்சு நடந்தது. ஆவின் நிர்வாக இயக்குநர் சிவராசுவை சந்தித்து, வாகன வாடகையை உயர்த்தி தரும்படி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us