ஓய்வுபெற்ற எஸ்.ஐ., கொலை சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு
ஓய்வுபெற்ற எஸ்.ஐ., கொலை சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு
ADDED : மார் 27, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:திருநெல்வேலியில், ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், டி.ஜி.பி., மற்றும் சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
திருநெல்வேலி முகமது மைதீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாகீர் உசேன் படுகொலையை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என கோரினார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அந்த மனுவை விசாரித்து, டி.ஜி.பி., திருநெல்வேலி போலீஸ் கமிஷனர், சி.பி.ஐ., இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து, எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டது.