sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' முதல் நாளில் 14% லாபம்

/

 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' முதல் நாளில் 14% லாபம்

 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' முதல் நாளில் 14% லாபம்

 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' முதல் நாளில் 14% லாபம்


ADDED : மார் 12, 2026 01:06 AM

Google News

ADDED : மார் 12, 2026 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு னேவை சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான 'செடிமாக் மெகாட்ரானிக்ஸ்' பங்குகள், நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஐ.பி.ஓ., விண்ணப்ப காலத்தில், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து மிகக் குறைவான வரவேற்பே கிடைத்திருந்த நிலையில், இன்றைய லாபம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் வெளியீட்டு விலை பங்கு ஒன்றுக்கு 1,352 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று என்.எஸ்.இ.,யில் 1,535 ரூபாயாகவும், பி.எஸ்.இ.,யில் 1,510 ரூபாயாகவும் பட்டியலிடப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு துவக்கத்திலேயே கிட்டத்தட்ட 14 சதவீதம்வரை லாபம் கிடைத்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் போது, 1,613 ரூபாய் வரை விலை உயர்வை சந்தித்திருக்கிறது. வர்த்தக முடிவில் பி.எஸ்.இ.,யில் 3.83 சதவீதம் சரிந்து 1,452 ரூபாய்க்கும், என்.எஸ்.இ.,யில் 6 சதவீதம் சரிந்து 1,442 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை, குறுகிய காலத்தில் ஓரளவு ஏற்ற இறக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, லாபத்தில் இருப்பவர்கள் ஒரு பகுதியை விற்று லாபத்தை பதிவு செய்யலாம் அல்லது நீண்ட கால நோக்கில் வைத்திருப்பவர்கள் 1,320 ரூபாய் என்ற விலையை 'ஸ்டாப்-லாஸ்' ஆகக் கொண்டு தொடரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.






      Dinamalar
      Follow us