தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிமென்ட் விலை கிடுகிடு; மூட்டைக்கு ரூ.50 உயர்வு! நாளை முதல் அமலுக்கு வருகிறது

 சிமென்ட் விலை கிடுகிடு; மூட்டைக்கு ரூ.50 உயர்வு! நாளை முதல் அமலுக்கு வருகிறது

 சிமென்ட் விலை கிடுகிடு; மூட்டைக்கு ரூ.50 உயர்வு! நாளை முதல் அமலுக்கு வருகிறது


ADDED : மார் 31, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : 'கட்டடங்களுக்கான கான்கிரீட் தயாரிக்க, அத்தியாவசிய தேவையான சிமென்ட் விலை, நாளை முதல், மூட்டைக்கு 50 ரூபாய் உயரும்' என, தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே நிலவும் போரால், எரிவாயு மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் தயாரிக்க தேவையான, குறிப்பிட்ட சில மூலப்பொருட்கள், வளைகுடா நாடுகளில் இருந்து வருவதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால், நம் நாட்டில், சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மூலப்பொருட்களை கொண்டு வருவதில், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிமென்ட் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த செலவுகளை சமாளிக்கும் வகையில், சிமென்ட் விலையை உயர்த்த, தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக, கட்டுமானத் துறையினர் கூறியதாவது: ஈரான் பிரச்னையை காரணம் காட்டி, சிமென்ட் விலையை உயர்த்த, சிமென்ட் நிறுவனங்கள் முக்கிய முடிவுகள் எடுத்துள்ளன. தற்போது, 50 கிலோ எடையுள்ள, ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதில், மூட்டைக்கு, 50 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை உயர்த்த, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை உயர்வு, ஏப்.,1 முதல் அமலுக்கு வரும் என, தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல், கட்டுமான பணிக்கான கம்பிகள் விலை, டன்னுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், ஏற்கனவே துவக்கப்பட்ட திட்டங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்; இது வீடு கட்டுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us