sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக்க தமிழகத்தில் கணக்கெடுப்பு துவக்கம்

/

தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக்க தமிழகத்தில் கணக்கெடுப்பு துவக்கம்

தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக்க தமிழகத்தில் கணக்கெடுப்பு துவக்கம்

தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக்க தமிழகத்தில் கணக்கெடுப்பு துவக்கம்


ADDED : ஆக 05, 2025 10:10 PM

Google News

ADDED : ஆக 05, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க, தமிழகத்தில் தொழு நோயாளிகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரை தாக்கி, உருக்குலைத்து முடக்கும் தன்மை கொண்டது தொழுநோய். நமைச்சல், தேமல், கை, கால்கள் அடிக்கடி உணர்ச்சிகள் அற்று மரத்துபோதல், தொழு நோயின் அறிகுறிகள். இது காற்றின் வாயிலாக பரவும் தன்மை கொண்டது. தொழுநோயை ஒழிப்பதற்கான பணிகளை, 1955 முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1983 ஜன., 30ம் தேதி முதல், காந்தி நினைவு நாளில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 2,500க்கும் அதிகமானோர், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட 9,356 பேர், அரசின் மாத உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.

தொழுநோய் இல்லாத இந்தியாவை 2027ம் ஆண்டிற்குள் உருவாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், தமிழகத்தை தொழுநோய் இல்லாத மாநிலமாக உருவாக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய சுகாதார இயக்க நிதியுதவியுடன், மாநிலம் முழுதும் தொழுநோயாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு பணிகளை தமிழக அரசு துவக்கி உள்ளது.

இதற்காக, களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று, தொழுநோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, முதற்கட்ட பரிசோதனையை செய்கின்றனர்.

கணக்கெடுப்பு நடந்த வீடுகளில், ரகசிய குறியீட்டை குறித்து விட்டு செல்கின்றனர். பாதிப்பு உள்ளவர்களுக்கு, அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us