தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கு ஒத்திவைப்பு  

 மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கு ஒத்திவைப்பு  

 மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கு ஒத்திவைப்பு  


ADDED : செப் 09, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தஞ்சாவூர் சுவாமிமலை சுந்தர்விமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவில் 2001, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றன.தற்போது 2027 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பினை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கேள்விகள் இல்லை.

அவர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படாவிடில் உரிமைகள் பறிபோகும். பதிவு செய்தால்தான் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நல உதவிகள் கிடைக்கும் என குறிப்பிட்டார். விசாரணையை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு அக்., 5 க்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us