ரயில் ஓட்டுனர்கள் பயிற்சி பெற ஆவடி, திருச்சியில் மையம்
ரயில் ஓட்டுனர்கள் பயிற்சி பெற ஆவடி, திருச்சியில் மையம்
ADDED : செப் 24, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய ரயில்வேயில் 20 வகைகளில், 14,800க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் உள்ளன.
ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் வெவ்வேறு தொழில்நுட்பம் இருக்கும். இது குறித்து, ரயில் ஓட்டுனர்கள் முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில், அமர்ந்த இடத்தில் இருந்தே கணினி உதவியுடன் பயிற்சி பெறும் வகையில், 'சிமுலேட்டர்' அமைக்கப்படும்.
ரயில் இன்ஜின் குறித்து ஓட்டுனர்களுக்கு கணினி வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழகத்தில் ஆவடி, திருச்சி உட்பட நாடு முழுதும், 50 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.