ADDED : செப் 09, 2025 05:32 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட, 2025ம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 'இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மை சமூகங்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பட்டியலில் உள்ள பிற நாட்டவருக்கு நீண்டகால விசாவும், அதன்பின் குடியுரிமையும் வழங்கப்படும் எனும் நிலையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த சலுகையை மறுப்பது நியாயமல்ல.
இலங்கை தமிழ் அகதிகள், இந்திய குடியுரிமை பெற முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் நிலைப்பாடு, ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரானது. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு, முதல் கட்டமாக நீண்டகால விசா, பின்னர் குடியுரிமை வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.