'மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு ஓரவஞ்சனை': திருமாமளவன்
'மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு ஓரவஞ்சனை': திருமாமளவன்
ADDED : மார் 17, 2025 12:53 AM

பெரம்பலுார்: பெரம்பலுாரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளளன் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார்.
தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மத்திய அரசு இந்த பிரச்னையை முடித்து வைக்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டவில்லை. ஏதோ இது, தமிழக பிரச்னை மட்டும் என, கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்களின் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமை உள்ள அரசாகவும், இலங்கை அரசுடன் இணக்கமான ஒரு அரசாகவும் இருக்கிறது.
ஆனால், தமிழக மக்கள் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளில் மத்திய அரசு ஓரவஞ்சனையோடு அணுகுவதே இந்த பிரச்னை தொடர காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.