சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்
சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததால் மத்திய அரசு அதிகாரி, மனைவி மாயம்
ADDED : ஏப் 01, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மனைவியுடன் மத்திய அரசு அதிகாரி தலைமறைவாகி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், 2021ல் இருந்து, காரைக்காலில் பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரின் மனைவி விமலா, கொரடாச்சேரியில், வட்டாரக் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக, 1.11 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பதாக, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், கொரடாச்சேரி சென்று, தம்பதி குறித்து விசாரித்து உள்ளனர். அப்போது, இருவரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.