கட்டுமான திட்ட பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் மத்திய அரசு உத்தரவு
கட்டுமான திட்ட பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் மத்திய அரசு உத்தரவு
ADDED : ஆக 02, 2026 11:00 PM
சென்னை: 'வளைகுடா நtடுகளில் நிலவும் பிரச்னையால், கட்டுமான திட்ட பணிகளை முடிப்பதற்கு, நான்கு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கலாம்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்னை யால், வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவுகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, அங்கிருந்து எரிபொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நம் நாட்டில் சிமென்ட், பதிகற்கள், பெயின்ட் போன்ற, அத்தியாவசிய கட்டுமான பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே தொடங்கப்பட்ட கட்டுமான திட்ட பணிகளை, குறித்த காலத்தில் முடிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, கட்டுமான பணிகளை முடிப்பதற்கான, அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.
இந்த விதியை தளர்த்தி, நான்கு மாதங்கள் கூடுதல் அவகாசத்தை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் வழங்கலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின் தமிழக தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
மத்திய அரசின் உத்தரவு அடிப்படையில், தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்கள், கூடுதல் அவகாசம் வழங்குவதற்கான உத்தரவு களை பிறப்பித்துள்ளன. இதன் அடிப்படை யில், தமிழகத்திலும் கட்டுமான திட்டங்களை முடிக்க, நான்கு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கக்கோரி, ரியல் எஸ் டேட் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
