பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு திட்டங்கள்: பிரதமர் மோடி
பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு திட்டங்கள்: பிரதமர் மோடி
ADDED : மார் 29, 2024 06:12 PM

புதுடில்லி: ‛‛ பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது '' என தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் கலந்துரையாடிய போது பிரதமர் மோடி கூறினார்.
தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன், ‛ எனது ஓட்டுச்சாவடி, வலிமையான ஓட்டுச்சாவடி' என்ற நிகழ்ச்சி வாயிலாக நமோ செயலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது மோடி கூறியதாவது: தமிழக மக்கள் எனக்கு அளித்த வரவேற்பை பார்த்து வியந்து போனேன். நமோ செயலி வாயிலாக தொண்டர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ., தொண்டர்களின் உழைப்பால் கட்சி வளர்ந்து வருகிறது. தொண்டர்களுடன் கலந்துரையாடும் போது பூத் கமிட்டி அளவில் எண்ணங்களை அறிய முடிகிறது. ஒவ்வொரு தொண்டரும் எவ்வளவு பணியாற்றுகிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் இந்த கலந்துரையாடலில், ஓட்டுச்சாவடியில் மத்திய அரசின் எந்த திட்டம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்தும் பூத் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

