தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ புதிய தென்னை ரகங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை: சிவ்ராஜ் சிங்

 புதிய தென்னை ரகங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை: சிவ்ராஜ் சிங்

 புதிய தென்னை ரகங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை: சிவ்ராஜ் சிங்


ADDED : மார் 08, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''மத்திய அரசின் தென்னை ஊக்குவிப்பு திட்டத்தால், தமிழகத்தில் 28 சதவீத விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்,'' என, மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய வேளாண் துறை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில், தென்னை விவசாயிகள் மாநாடு, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில், தென்னை விவசாயிகள், வேளாண் நிபுனர்கள் என பலர் பங்கேற்றனர். தென்னை உற்பத்தி அதிகரிப்பு, விவசாயிகளின் வருவாய் உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

நாட்டில் உள்ள, தென்னை தோப்புகள், 60 ஆண்டுகள் பழமையானவை. அதனால், அவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், வெள்ளை ஈ தாக்கத்தால், தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தடுக்க, மத்திய அரசு, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட புதிய மற்றும் மேம்பட்ட தென்னை ரகங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் தென்னை ஊக்குவிப்பு திட்டத்தால், தமிழகத்தில் 28 சதவீத விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி:

இந்த மாநாட்டில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், முக்கிய பரிந்துரையாக, ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதனால், தேங்காய் எண்ணெய்க்கான விலை நிலைத்திருக்கும். இதுகுறித்து, தென்னை வளர்ச்சி வாரியம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. மாநில அரசுகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 2 லட்சம் வீடுகள் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளன.

நுாறு நாள் வேலை திட்டத்திலும், 3 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, மாநில அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us