ADDED : ஜன 18, 2024 12:43 AM
சென்னை:மத்திய அரசு, பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கவும்; முழு பராமரிப்பு செய்து ஆயுள் காலம் நீட்டிக்கவும், 'ரீ பவரிங்' எனப்படும் காற்றாலை திறனை அதிகரிக்கும் கொள்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 1986ல் இருந்து, 55 கிலோ வாட் முதல், 600 கிலோ வாட் திறனில் காற்றாலைகளை நிறுவியுள்ளன. ஒரு காற்றாலையின் ஆயுள் காலம், 20 - 25 ஆண்டுகள்.
தற்போது, 2 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறனில் ஒரு காற்றாலை கிடைக்கிறது.
தமிழக அரசும், ஆயுள் முடிந்த காற்றாலைகளை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்டங்களுக்கான மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024' என்ற பெயரில் வரைவு கொள்கை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் சமீபத்தில் கருத்துக்களை கேட்டுள்ளது.
இந்நிலையில், கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி, காற்றாலைகளை புதுப்பிக்க வரும் நிறுவனங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க மத்திய அரசு நேற்று குழு அமைத்துள்ளது.
மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறையின் இணை செயலர் - காற்றாலை தலைமையில் செயல்படும் குழுவில், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் உட்பட ஆறு உறுப்பினர் உள்ளனர். தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் உறுப்பினர் செயலர்.
இந்நிறுவனம், சென்னையில் செயல்படுகிறது.