மத்திய அமைச்சர்கள் கல் மனம் படைத்தவர்கள் காங்.,தலைவர் பேட்டி
மத்திய அமைச்சர்கள் கல் மனம் படைத்தவர்கள் காங்.,தலைவர் பேட்டி
ADDED : ஆக 02, 2024 07:47 PM

திண்டுக்கல்:''வயநாட்டிற்கு இதுவரை மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. காரணம் அவர்கள் கல் மனம் படைத்தவர்கள்''என,காங்.,மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் துாய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டுள்ளோம். ஒப்பந்தாரர்கள் முறையாக சம்பளம் வழங்கவில்லை. மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் என குற்றம்சாட்டுகின்றனர். துாய்மை பணியாளர்களுக்காக கூட்டுறவு
சங்கங்கள் அமைத்து அதன் மூலமாக அவர்களே தங்களுக்குரிய சம்பளத்தை பங்கு பிரித்து கொள்வார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் துாய்மை பணியாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
மக்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள்,மக்களை நேசிப்பவர்கள் தான் வயநாடு விவகாரத்தை கேள்விபட்டதும் பதைபதைப்பார்கள். வயநாட்டிற்கு இதுவரை மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. காரணம் அவர்கள் கல் மனம் படைத்தவர்கள். மக்கள் மீது அவர்களுக்கு அனுதாபம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வயநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் வயநாடு பகுதிக்கு ரெட் அலர்ட் கொடுத்தோம் என பொய் சொல்கிறார் என பினராயி விஜயன் கூறினார். இதுதான் பா.ஜ.,வினருடைய சித்தாந்தம் என்றார்.