தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காங்., கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு

 காங்., கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு

 காங்., கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு

4


ADDED : ஆக 29, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 07:18 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், நாற்காலிகளை கட்சியினர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, மாவட்ட செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம், திருவண்ணா மலையில் நேற்று நடந்தது . அதில், கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அடுத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி மறு சீரமைப்பு நிர்வாகிகள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு, சால்வை போட, மாநில செயற்குழு உறுப் பினர் கோபாலகிருஷ்ணன் , மேடை மீது ஏறினார். அவரை, குணசேகரன் தடுத்து நிறுத்தினார்.

இதனால் கோபாலகிருஷ்ணன், குணசேகரன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பாக மாறியது. அப்போது, அங்கிருந்த நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர்.

கூட்டம் நடந்த இடத்தில் பரபரப்பு அதிகரித்த நிலையில், கட்சியின் மேலிட பார்வையாளர் துரைவேலன், மண்டல பொறுப்பாளர் அருள் பெத்தய்யா உள்ளிட்டோர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பிறகு, கூட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us