உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 29, 2026 07:18 AM

அ நிறம் | அளவு
தி.மு.க., - ஐ.டி., அணியின் 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில், '258 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்' என, கடந்த ஜூன் 8ம் தேதி கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தனக்கு எதிராக அவதுாறான செய்தி வெளியிட்டதற்காக, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - ஐ.டி., அணிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - ஐ.டி., அணி, வரும் செப்., 15ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
