ADDED : ஜன 30, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று பெரும்பாலான இடங்களில், பகலில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில், லேசான பனிமூட்டம் நிலவும். கிழக்கு திசை காற்று மாறுபாட்டால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் மூன்று நாட்கள் லேசான மழை பெய்யும்.
நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிலவும். குமரிக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில்சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, இந்தபகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.