ADDED : ஜூலை 14, 2026 04:37 AM

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்சமாக மதுரையில் 105.8 டிகிரி பாரன்ஹீட், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அதை தொடர்ந்து வேலுார், திருத்தணி, சென்னை, கடலுார், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், திருச்சி, பாளையங்கோட்டை, துாத்துக்குடி ஆகிய இடங்களில் வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இரு தினங்களுக்கு, 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்.
ஈரப்பதமும் சற்று அதிகரித்து, வறண்ட வானிலையுடன், அசவுகரியமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; வெப்பம் சார்ந்த அசவுகரியங்கள் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
