UPDATED : செப் 28, 2025 07:46 AM
ADDED : செப் 28, 2025 06:30 AM

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்கள், தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை பகுதியில், தலா 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிஷா - சத்தீஸ்கர் பகுதிகளில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கும்.
தற்போது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், அக்., 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.