ADDED : பிப் 08, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், ஜன., 14ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, ஒரு மாதமாக பகலில் வறண்ட வானிலையும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியும் நிலவுகிறது.
வடமாவட்டங்களில், கடந்த மாத இறுதியில் இருந்து, இம்மாதம் முதல் வாரம் வரை பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மீண்டும் குளிர் அதிகரித்துள்ளது.
அதேபோல, பகல் நேர வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக, அதிகபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிஉள்ளது.
இந்நிலையில், இன்றும், நாளையும் வடக்கு கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

