உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 16, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
சென்னை: ரயில்வேயில் மொத்தம் 17 மண்டலங்கள் செயல்பட்டு வந்தன. எனவே, ரயில்வேயின் 'லோகோ'வில், சிவப்பு நிறத்தில், ஒரு நீராவி இன்ஜினுடன், பெட்டி இணைக்கப்பட்டுள்ள படம், மையப்பகுதியில் தேசிய சின்னம், ரயில்வேயில் உள்ள மொத்த மண்டல ங்களையும் குறிக்கும் வகையில், 17 நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்தன.
இந்நிலையில், 18 வது மண்டலம், தெற்கு கடற்கரை ரயில்வே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக வைத்து, வரும் 1ம் தேதி உருவாக்கப்படுகிறது. எனவே, ரயில்வேயின் 'லோகோ'வில் 18 நட்சத்திரங்கள் இடம் பெறும் வகையில், திருத்தம் செய்ய வேண்டும் என, ரயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
