'பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்': நயினார் நகேந்திரன் பேச்சு
'பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்': நயினார் நகேந்திரன் பேச்சு
ADDED : ஆக 25, 2025 11:44 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாட்டில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அவர் பேசியதாவது: திண்டுக்கல் என்றாலே பூட்டு. நாம் போட வேண்டியது தி.மு.க., ஆட்சிக்கு வேட்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பழனிசாமி முதல்வராக வேண்டும் என்றார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது : இங்கு கூடியிருப்பது சாதாரண கூட்டம் அல்ல. சமூக விடுதலைக்கான கூட்டம். தெரு, தெருவாக வீதி, வீதியாக சென்று சிவப்பு பச்சை கொடிகளை ஏற்றினேன். அடுத்த ஜாதிகள் குறித்து நான் பேசியது இல்லை. அன்றைய ஆட்சியாளர்கள் என் மீது விஷத்தை துாவினார்கள். என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்று சமுதாய பரப்புரை மேற்கொள்ளும் போது தடை செய்தது அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சி.
தேர்தலில் நிற்க தொடங்கினேன். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இல்லை. என் சமுதாய மக்களை தடை இல்லாமல் சந்திக்க வேண்டும் என்பதற்காக. இனிமேல் ஜாதிக்கு இடமில்லை, சமத்துவத்துக்கு தான் இடம். பிரதமர் மோடியால் தான் தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டது என்றார்.