ADDED : அக் 29, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வாக்காளர் சிறப்பு முகாம் தேதிகளை மாற்றி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், இன்று முதல், 2025 ஜனவரி 6ம் தேதி வரை, மாநிலம் முழுதும் நடக்க உள்ளன.
வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற வசதியாக, நவம்பர் 9, 10 மற்றும் 23, 24ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு மாற்றாக, 9ம் தேதி அரசு பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, சிறப்பு முகாம்களை 9 மற்றும் 10ம் தேதிக்கு பதிலாக, 16, 17ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

