sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை திரும்பும் பிளானை மாற்றுங்க! பயணிகளுக்கு போக்குவரத்துத் துறை வேண்டுகோள்

/

சென்னை திரும்பும் பிளானை மாற்றுங்க! பயணிகளுக்கு போக்குவரத்துத் துறை வேண்டுகோள்

சென்னை திரும்பும் பிளானை மாற்றுங்க! பயணிகளுக்கு போக்குவரத்துத் துறை வேண்டுகோள்

சென்னை திரும்பும் பிளானை மாற்றுங்க! பயணிகளுக்கு போக்குவரத்துத் துறை வேண்டுகோள்


ADDED : ஜன 17, 2025 08:02 PM

Google News

ADDED : ஜன 17, 2025 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; நெரிசலை தவிர்க்க, சென்னை திரும்புவோர் தமது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள பஸ் இருக்கைகளில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக தலைநகர் சென்னையில் இருந்த வெளிமாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட புறப்பட்டுச் சென்றனர்.

தற்போது விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். பஸ்கள், ரயில்கள், சொந்த வாகனங்கள் என்று அவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில், பொங்கல் விடுமுறை சென்னை திரும்பும் பஸ் பயணிகள், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கும் திரும்பிடும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்கிட முதல்வர் உத்தரவிட்டார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய நான்கு நாட்களில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 7,498 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15,866 பஸ்கள் இயக்கப்பட்டு 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் வசதிக்க 15.01.2025 முதல் 19.01.2025 வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,290 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து 6,926 பஸ்களும் என ஆக மொத்தம் 22,676 பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் 17.01.2025 அன்று 28,022 பயணிகளும், 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பஸ்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் .கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us