ADDED : ஜூலை 19, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திண்டிவனம் அடுத்த பெரணி ரயில்வே யார்டில், இன்று மற்றும் 22ம் தேதி பகல் 12:00 முதல் மாலை 3:30 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பகுதி ரத்து
தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்
விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும்.
முழு ரத்து
இதேபோல், ஜோலார்பேட்டை அருகில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், காட்பாடி - ஜோலார்பேட்டை காலை 10:30, ஜோலார்பேட்டை - காட்பாடி பகல் 12:55 மணி ரயில்கள் வரும் 21ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு ரயில்வே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.