வரலாற்றையே மாற்றுகின்றனர்: பா.ஜ., மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு
வரலாற்றையே மாற்றுகின்றனர்: பா.ஜ., மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு
ADDED : அக் 05, 2024 08:58 PM

சென்னை: '' பா.ஜ.,வினர் பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதோடு அதை உண்மையாக்க வரலாற்றை மாற்றுகின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னையில் , திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 75 ஆண்டுகளில், நமது கொடி மாறவில்லை. சின்னமும் மாறவில்லை. நமது எதிரிகள் வலிமை வேண்டுமானால் மாறி இருக்கலாம். நாம் மாறவில்லை. போராட்ட களமும் மாறவில்லை. இது தான் தி.மு.க., கருணாநிதி போல் வாழ அவரால் மட்டுமே முடியும். கருணாநிதி வழியில் வாழ்பவன் நான்.
நாங்கள் அரசியலுக்கு வந்த போது, எதிரிகள் பொய்களையும், வதந்திகளையும் பரப்பினர். ஆனால் இன்று, பா.ஜ.,வினர் பொய்களையும், அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவதோடு மட்டுமல்லாமல், அதை எப்படி உண்மையாக மாற்றலாம் என யோசிக்கின்றனர். அதனால், வரலாற்றை மாற்றுகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.