'ஜாதி அடையாளத்துடன் கூடிய தெருக்களின் பெயர்கள் மாற்றம்'
'ஜாதி அடையாளத்துடன் கூடிய தெருக்களின் பெயர்கள் மாற்றம்'
ADDED : அக் 11, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''சாலைகள், தெருக்களில், இழிவான தன்மையோடு ஜாதி பெயர்கள் இருந்தால், அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் கிராம ஊராட்சிகளில் நேற்று நடந்த, கிராமசபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தி.மு.க., அரசு, சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில், இழிவான தன்மையோடு ஜாதி பெயர்கள் இருந்தால், அதை மாற்றி, பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.