தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு குற்றப்பத்திரிகை ரத்து செய்து உத்தரவு

 அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு குற்றப்பத்திரிகை ரத்து செய்து உத்தரவு

 அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு குற்றப்பத்திரிகை ரத்து செய்து உத்தரவு


ADDED : ஏப் 26, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்டதாக பதிவான வழக்கில், குற்றப்பத்திரிகையை பொறுத்தவரை, ஒருவர் மீது மட்டும் ரத்து செய்யப்படுகிறது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த ஒரு ராணுவ வீரரின் உடல், மக்களின் அஞ்சலிக்காக, 2022 ஆக., 13ல் காலை 11:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடினர். தமிழக அமைச்சர் தியாகராஜன் அங்கு வந்தார்.சிலர் சட்டவிரோதமாகக் கூடி, அமைச்சரின் வாகனத்தை தடுத்து, சேதப்படுத்தி, அவரை தாக்க முயன்றதாகவும், தேசியக் கொடி இடம் பெற்றிருந்த அமைச்சரின் வாகனம் மீது இருவர் காலணிகளை வீசி அவமதித்ததாகவும் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதில், 32 பேர் மீது மதுரை ஜெ.எம்., 6 நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்களில், ஐந்தாவது எதிரியாக சேர்க்கப்பட்ட தொழிலதிபர் ஜெயகர்ணா குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம்:சம்பவம் காலை, 11:30 மணிக்கு நடந்தது. மனுதாரர், மதியம், 12:30 மணிக்கு விமான நிலையம் வந்தார். சம்பவத்தில் அவருக்கு தொடர்பில்லை. மரியாதை செலுத்திய உடனேயே அங்கிருந்து வெளியேறினார்.இது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசு தரப்பு வழக்கில் முரண்பாடுகள் உள்ளன. விசாரணையின் நேர்மை குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. ஆதாரங்கள் இன்றி, தனிநபர்களை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கும் கவலைக்கிடமான போக்கை வெளிப்படுத்துகின்றன. குற்றப்பத்திரிகையானது மனுதாரரை பொறுத்தவரை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us