பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : ஏப் 05, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹமீது உசேன் உட்பட ஏழு பேரை சிறையில் அடைத்துள்ளனர். ஏழாவது நபரான சென்னை தரமணியைச் சேர்ந்த பைசல் ஹுசைன் மீது, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஏழு பேரும், ராயப்பேட்டையில் கல்வி நிறுவனம் என்ற பெயரில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகவிபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

