தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை


ADDED : டிச 25, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்த இருவர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு, ஆள் சேர்த்தது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த, அப்துல் ரஹ்மான்,22, முஜிபுர் ரஹ்மான், 42 ஆகியோரை, கடந்த ஜூலையில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள,சென்னையை சேர்ந்த ஹமீது உசேன், அகமது மன்சூர் ஆகியோருடன் சேர்ந்து, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆள் சேர்த்தனர். அவர்களுக்கு ரகசிய வகுப்பு நடத்தி, பயங்கரவாத பயிற்சி அளித்தனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர்' எனக் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us