தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அயோத்தியில் சதுர்வேத வேதபாராயணம்

 அயோத்தியில் சதுர்வேத வேதபாராயணம்

 அயோத்தியில் சதுர்வேத வேதபாராயணம்


ADDED : பிப் 08, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேதபாராயண அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் 10 நாட்கள் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்று வரும் சதுர்வேத பாராயணம், மஹாருத்ர யாகம், 88ம் ஆண்டாக, இம்முறை வரும் 28 ம் தேதி, உ.பி., மாநிலம் அயோத்தியில் தொடங்குகிறது.

அயோத்தியில், காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ மடத்தில், ருக்வேத ஸம்ஹிதா யக்ஞம், இஷ்டி போன்றவற்றை, தினகர சர்மா, நாராயண தீட்சிதர் ஆகியோர் நடத்துகின்றனர்.

மஹாருத்ர ேஹாமம், வால்மீகி ராமாயண நவாஹம், சீதா கல்யாணம், சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிேஷகம், ஸம்ப்ரதாய நாம சங்கீர்த்தனங்கள், உபன்யாசம் ஆகியவை, ஹரிஹர் சேவாசதன், வைதேகி பவன் - ஜானகி காட் ஆகிய இடங்களில் நடைபெறும்.

மஹா ருத்ரம், வயலுார் ராமகிருஷ்ணன கனபாடிகள், செதலபதி சுப்ரமணிய கனபாடிகள் ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

ராமாயண உபன்யாசம், வடகுடி சங்கரராம தீட்சிதர் தலைமையில் நடைபெறும். அகோராஸ்த்ர ேஹாமத்தை, புதுடில்லி வைத்யநாத சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார்.

ஆதம்பாக்கம் விட்டல் பஜன் மண்டலி, நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம் ஆகியவற்றைச் செய்கிறது.

மார்ச் 8 ல், யஜுர் வேதத்தில், 'சாகையில் கல் வைத்த வாரம்' பரிட்சை நடக்கிறது.

விழா நிறைவு நாளான மார்ச் 10ம் தேதி, பாராயணத்தை நடத்திக் கொடுக்கும் நுாற்றுக்கணக்கான வேத வித்வான்களை, அறக்கட்டளையின் நிர்வாகிகள் மயிலை குப்புஸ்வாமி மற்றும் ஆதம்பாக்கம் சந்திரன் ஆகியோர் கவுரவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us