ADDED : ஆக 05, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்: தனியார் கெஸ்ட் ஹவுஸ் நீச்சல் குளத்தில் மூழ்கி சமையல்காரர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 45; சமையல் கலைஞர். இவர், புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையை கழிக்க நண்பர்கள் 20 பேருடன் பெரிய முதலியார்சாவடியில் உள்ள தி கிளப் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று நீச்சல் குளத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மது போதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.