ADDED : ஆக 05, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் நண்பனின் தந்தையை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தினகரன். இவரது நண்பர் அரியூரை சேர்ந்த தினேஷ், 20; தினேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருடன் பழக வேண்டாம் என, தந்தை கண்டித்ததால், தினகரன் நட்பை துண்டித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ், கடந்த 2ம் தேதி இரவு 9;00 மணிக்கு குடிபோதையில் தினகரன் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை ஜெயராமனை திட்டி, கத்தியால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயராமன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தினேஷ் மீது, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.