sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செல்லமே...: கன்னி, கோம்பை எப்பவுமே தனிமவுசு

/

செல்லமே...: கன்னி, கோம்பை எப்பவுமே தனிமவுசு

செல்லமே...: கன்னி, கோம்பை எப்பவுமே தனிமவுசு

செல்லமே...: கன்னி, கோம்பை எப்பவுமே தனிமவுசு

4


UPDATED : பிப் 17, 2024 11:57 AM

ADDED : பிப் 17, 2024 04:25 AM

Google News

UPDATED : பிப் 17, 2024 11:57 AM ADDED : பிப் 17, 2024 04:25 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ராணுவத்திற்கு, கர்நாடகா மாநில பாரம்பரிய நாய், 'முதொல்' பங்களிப்பு குறித்து, 'மான் கி பாத்' நிகழ்ச்சியில், பாரத பிரதமர் மோடி பேசியபிறகு, நாட்டு இன நாய்கள் மீது, கவனம் திரும்பியுள்ளது என்கிறார் கோவை, சரவணம்பட்டி, 'டாக்பார்ம்' உரிமையாளர் அன்புதங்கம்.

இறக்குமதி நாய்களே அதிகளவில் ராணுவம், வனத்துறை, காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக நாட்டு இன நாய்களுக்கும் அத்திறன் இருப்பதை உறுதி செய்ய, கன்னி கோம்பை இன ரத்தமாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது:Image 1233045'' தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட நாட்டு நாய் இனங்கள் இருந்தன. அதில், பெரும்பாலான நாய் இனங்கள் அழிந்து விட்டன. ஒரு சில அழிவின் விளிம்பில் உள்ளன. கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் இனத்தை சேர்ந்த, 56 நாய்கள் வைத்துள்ளோம். பாரம்பரிய நாய்கள், எல்லா காலநிலைகளையும் தாங்கி, வளர்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவற்றை பராமரிப்பது எளிது. இவை எளிதில் சோர்வடையாது''.

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில், நாட்டு நாய்கள் வளர்த்தால், மானியம் கொடுப்பதோடு, தடுப்பூசி இலவசமாக போடுகிறார்கள். தமிழக பாரம்பரிய நாய்கள் வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

---

ரயிலில் 'பெட்ஸ்'சுடன் ஜாலியா பயணிக்கலாம்


செல்லப்பிராணிகளை வெளியூர்களுக்கு ரயிலிலும் இனி அழைத்து செல்லலாம் என, ரயில்வே அறிவித்துள்ளது.

ஏ.சி., அல்லது பர்ஸ்ட் கிளாஸ் கோச்சில் பெட்ஸை அழைத்து செல்ல முடியும். ஒருவருடன், ஒரு செல்லப்பிராணி மட்டுமே... இரண்டு சீட் கொண்ட 'கூப்பே' அல்லது நான்கு சீட் கொண்ட 'கேபினில்' பயணிக்கலாம். கேபினில், தனி டோர் இருப்பதால், மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாது.Image 1233046* பயணிப்பதற்கு முந்தைய நாளே, டிக்கெட் முன்பதிவு அலுவலகத்தில் பெட்ஸ் எடுத்து செல்வதற்கு அனுமதி கடிதம் கொடுக்கணும். அதில், ஓனர் விபரம், புறப்படும் இடம், சேரும் இடம் குறித்த விபரங்கள், செல்லபிராணி வயது, பிரீட் வகை, மெடிக்கல் சர்பிடிகேட் இணைக்க வேண்டும்.

* இதற்கு ஒப்புதல் கிடைத்ததும், டிரெயின் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பார்சல் அலுவலகத்திற்கு சென்று, அங்கு செல்லப்பிராணியின் மருத்துவ சான்றிதழ், ஓனர் அடையாள அட்டை, முன்பதிவு செய்த டிக்கெட் ஆகியவற்றை கொடுத்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

* பாத்ரூம் செல்ல பழக்கியிருந்தால் பிரச்னை இருக்காது. இல்லாவிட்டால், எந்தெந்த ஸ்டேஷனில், எந்த நேரத்தில், ட்ரெயின் நிற்கும் என்ற விபரங்களை தெரிந்து கொண்டு, ஒரு ஸ்டேஷன் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே உணவு கொடுக்கலாம். ட்ரெயின் நின்றதும் வெளியில் அழைத்து சென்றால் 'ஒன் அண்டு டூ' போய்விடும். இதற்கு பிரத்யேக 'பேட்'கள், கடைகளில் கிடைப்பதால் கவலை வேண்டாம்.

---

பைரவ் பிகேவியர் சொன்னா நம்ப மாட்டீங்க...!


''சொன்னா நம்ப மாட்டீங்க. பைரவ் பாத்ரூம்ல தான் 'ஒன் அண்டு டூ' போவான். அவுட்டிங் போய்ட்டு வீட்டுக்கு வரதுக்கு லேட் ஆனாலும், அடக்கி வச்சிட்டு, கதவை திறந்ததும் குடுகுடுன்னு ஓடி போய், வேகமா காலால பாத்ரூம் கதவை தள்ளிவிட்டுட்டு உள்ளே போவான். புத்திசாலி பெட் பைரவ்னு'' மூச்சுவிடாம பேசும் கவிநிலவு, கோவை, ரத்தினபுரிபகுதியை சேர்ந்தவர். தன் பைரவ்வோட சேட்டைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.Image 1233048''வெள்ளை தோல்ல, கருப்பா அங்கங்க புள்ளி இருக்கற யுனிக் லுக் தான், டால்மேஷன் பிரீட்டோட ஸ்டைல். ஒரு மாத குட்டியா வாங்கி பைரவ்னு பேரு வச்சோம். இப்போ பைரவ்வுக்கு மூணு வயசாகுது. இதுக்கு தனி கூண்டு வச்சிருக்கோம். ஆனா அதுக்கு அந்த இடம் பிடிக்காது. கூண்டுங்கற வார்த்தைய சொன்னாவே ஓடி போய் ஒளிஞ்சிக்கும். எல்லா வார்த்தையும் பைரவ்க்கு புரியும். வாட்டர் பாட்டில் எடுத்துட்டு மாடியில இருக்க என்னோட ரூம்க்கு போவேன். நான் பாட்டில்ல தண்ணி புடிச்சாவே, 'மேல போலாம் வா'ங்கற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு படிக்கட்டுல நிக்கும்.

என்கிட்ட குறும்பு பண்ற பைரவ், வயசானவங்க கிட்ட ரொம்ப சாதுவா இருக்கும். அதோட ஹாபி வேடிக்கை பாக்கறது தான். வயிறு சரியில்லன்னா, வீட்டு தோட்டத்துல இருக்கும் செடிய, அதுவே சாப்பிட்டு சுய வைத்யம் பார்த்துக்கும். இதெல்லாம் தானாவே செய்யறதால தான், பைரவ்வ புத்திசாலின்னு சொன்னேன்,'' என்றார்.

---

அவங்க அன்பை உணர ஆரம்பிச்சிட்டா...


ரஜினியும், சிகப்பியும் படைத்தளபதிகள். மற்ற நான்கு நாய்களையும் இவங்க தான் வழிநடத்துவாங்க என்கிறார், கோவையை சேர்ந்த பேஷன் டிசைனர் ஷோபனா.

ஒரு பெட் வளர்க்கணும்னு ஆசைப்பட்டா அதுக்காக நேரம் செலவிடணும், பராமரிக்கணும். வெளியூர் சென்றால் கூட அவங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யணும். நீங்க எப்படி 6 நாய்கள் வளர்க்குறீங்கன்னு கேட்டதும் சிரித்தபடியே ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தார்.Image 1233049''சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை என, பாரம்பரிய நாட்டு ரக நாய்களை வளர்க்கறதால, பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அவங்களுக்குள்ளே விளையாடிக்குவாங்க; சண்டை போட்டுக்குவாங்க. வெளியாட்கள் யாரையும் நெருங்க விடமாட்டாங்க.

இதில ரஜினியும், சிகப்பியும் படைத்தளபதிகள் மாதிரி, மற்றவங்கள வழிநடத்துவாங்க. என்னோட பலமே இந்த ஆறு பேரும் தான். பெட் வளர்க்கறது உணர்வு ரீதியான அனுபவம். ஒருமுறை பழகிட்டா, அவங்க அன்பை உணர ஆரம்பிச்சிட்டா, பிரியவேமுடியாது,'' என மலர்ச்சியோடு பேசினார்.

---

கோவையில் நாளை டாக் ஷோ!

Image 1233050'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்'சார்பில், அவினாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நாளை நடக்கும், டாக் ஷோ ரொம்ப ஸ்பெஷல். க்ரூமிங் செய்து அழகா இருக்க உங்க பப்பியோட ஸ்டைலா வந்துடுங்க. எல்லா பிரீட் பப்பீஸ், டாக்ஸ் அழைத்து வரலாம். வித்தியாசமான ஆக்டிவிட்டிகளுடன், பார்வையாளர்களின் மனதை கவரும்,'டாக்'கிற்கு, விருதுகள் காத்திருக்கின்றன. தகவலுக்கு, WWW.DOGSNSHOWS.COM என்ற இணையதளம் அல்லது 98430 79767/ 95852 66566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

என்னங்க! உங்க பப்பியோட போட்டி போட்டு, ஸ்டைலா போஸ் குடுக்க, ரெடி ஆகுறீங்க போல!

---

டாக்டர்'ஸ் கார்னர்: உங்க வீட்டுல விசேசமா?


நாய்களை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கணும்? - கணேஷ், வசந்தபிரியா, மதுரை.

நாய்கள் கர்ப்பமாக இருக்கிறதா என, பரிசோதிப்பது அவசியம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, கர்ப்பமான மூன்று வாரத்தில் எடுக்கலாம். 45 நாட்களுக்கு பின் எக்ஸ்ரே எடுத்தால், எத்தனை குட்டிகள் உருவாகியிருக்கின்றன என்பதை அறியலாம். கர்ப்பத்தை உறுதி செய்த பின், உணவு, பராமரிப்பு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மல்டி விட்டமின், கால்சியம் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது. ஆனால், 'மேட்டிங்' செய்வதற்கு முன்பு, தடுப்பூசி போட வேண்டும். அப்போது தான், ஆரோக்கியமான சந்ததி உருவாகும். மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில், குடல்புழு நீக்கம் செய்யலாம்.Image 1233051கர்ப்ப காலத்தில் குளிக்க வைக்கலாம், வாக்கிங் அழைத்து செல்லலாம். ஆனால் ஓடாமல், குதிக்காமல் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். குட்டி ஈனும் நாட்கள் நெருங்கும் போது, மருத்துவரை அணுகுவது அவசியம். இச்சமயத்தில் ஓனர் வெளியூர்களுக்கு செல்வதை, தவிர்க்க வேண்டும். அவர்களின் அரவணைப்பை, நாய்கள் எதிர்பார்க்கும்.

- சங்கர், அரசு கால்நடை மருத்துவர், கோவை.



---

உள்ளமெல்லாம்உங்கள் தேடல்.எழுத துடிக்குதுஅன்பு மடல்.

பெயர் மட்டுமேபெயர் இல்லை.நெஞ்சங்களில் வாழ்வதுமட்டுமே பெயர்.

நீங்கள் காட்டியபாதையை எதிர்பார்த்துமீண்டு வருவோம்கால நேரம் பார்த்து...Image 1233052

தீர்க்கப் பார்வையில் சின்ன கேப்டன், தன் செல்லம் டோக்கியோவுடன்.



---

'செல்பி ஸ்டார்!'

Image 1233054உங்க 'பெட்'டோட ஸ்டைலா செல்பி கிளிக் செய்து அனுப்பினால் இப்பகுதியில் வௌியாகும். சர்ப்ரைஸ் கிப்ட்டும் உண்டு.

99526 37026



---

உங்க செல்லத்துக்குள்ளும் ஆயிரம் டேலன்ட் இருக்கும். அதன் சேட்டையை அப்படியே போன்ல, 2 நிமிட வீடியோவாக ஷூட் பண்ணி, எங்களுக்கு அனுப்புங்க... நாங்க'தினமலர்' வெப்சைட்ல வெளியிடுகிறோம். நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உங்க செல்லத்தோட டேலன்ட்ட உலகமே பார்த்து வியக்கட்டும்.... சிறந்த வீடியோவுக்கு பரிசும் உண்டுங்க!

99526 37026

Image 1233055---

லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!


செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை 'வாட்ஸ் ஆப்'பில்' அனுப்புங்க.

98940 09310








      Dinamalar
      Follow us