sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை- -- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

/

சென்னை- -- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

சென்னை- -- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

சென்னை- -- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை


ADDED : நவ 01, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 01, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : தமிழகத்தில் பாசஞ்சர் ரயில்களை காட்டிலும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என அதிவேக ரயில்களின் ஆதிக்கம் அதிகம். இவற்றில் வெகுசில ரயில்களில் முன்பதிவு டிக்கட் விற்கப்படுகிறது. ஆன்-லைன் டிக்கட்கள் சில மணி நேரத்தில் தீர்ந்துவிடுகிறது. வசதியற்ற மக்கள், திடீர் பயணமாக புறப்படுபவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பொதுப்பெட்டிகளில் நெருக்கடியில் பயணிக்கின்றனர்.

1998 வரை திண்டுக்கல்- - திருச்சி இடையே மீட்டர்கேஜ் வழித்தடமாக இருந்த வரை சென்னை-- செங்கோட்டை ரயில்கள் இயக்கப்பட்டன. அகலப்பாதை பணிக்காக இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் சென்னையிலிருந்து விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியே செங்கோட்டை வரை 109/110 எண்ணுடன் இயக்கப்பட்டன.

2022 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இயக்க துவங்கியுள்ளது. இது செங்கோட்டையில் காலை 7:05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது. இதையே நீடிப்பு செய்து சென்னை செங்கோட்டை ரயிலாக மீண்டும் இயக்கலாம். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us