ADDED : ஜன 12, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இன்றும், நாளையும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும் காலை, 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் மதியம் 1:45 மணிக்கு நாகர்கோவில் செல்லும்
நாகர்கோவிலில் இருந்து இன்றும், நாளையும் மதியம் 2:25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதேநாளில் இரவு 11:25 மணிக்கு எழும்பூர் வரும்.
இந்த சிறப்பு ரயில்கள், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.