ADDED : நவ 16, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், கடந்த 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட, 'டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேஷன்ஸ்' படிப்பில், இதுவரை 30,000க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாகவும் நேரடியாகவும் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தில், இரண்டு நிறுவனங்களிலும் படிக்கும் வகையில், பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்ரி சேகரும், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடியும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனால், மாணவர்களுக்கு இரண்டு நிறுவனங்களின் சிறந்த பாடங்களை படிக்கவும், ஆய்வகங்களை பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

