சென்னை: தனியார் மருத்துக்கல்லூரிக்கு வெடி குண்டு மிரட்டல்
சென்னை: தனியார் மருத்துக்கல்லூரிக்கு வெடி குண்டு மிரட்டல்
ADDED : ஏப் 06, 2024 06:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வேலப்பன் சாவடியில் அமைந்துள்ள தனியார் மருத்துவகல்லூரிக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை வேலப்பன் சாவடியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. மருத்துவக்கல்லூரியுடன் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவ கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைமற்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

