உள்ளடக்கத்திற்கு செல்ல
அதிக வருவாய் சென்னை சென்ட்ரலுக்கு மூன்றாவது இடம்
அதிக வருவாய் சென்னை சென்ட்ரலுக்கு மூன்றாவது இடம்
ADDED : செப் 04, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி அளித்த பேட்டி:
ரயில்வேயில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களுடன், நவீன கட்டமைப்புகளை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த நிதி ஆண்டில், பயணியர் பிரிவில், நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டும் முதல், 10 ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் டில்லி ரயில் நிலையம், 3,337 கோடி ரூபாய்; இரண்டாம் இடத்தில், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையம், 1,692 கோடி ரூபாய்; மூன்றாவது இடத்தில் சென்னை சென்ட்ரல், 1,299 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
