சென்னையில் பட்டாசு வெடித்து வீடு சேதம்; 4 பேர் பலியான சோகம்
சென்னையில் பட்டாசு வெடித்து வீடு சேதம்; 4 பேர் பலியான சோகம்
ADDED : அக் 19, 2025 04:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள தண்டுரை விவசாயி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து சிதறியது. இதில், சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகள் வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.