17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு
17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிங்க..: சவுக்கு சங்கர் மனு
UPDATED : ஆக 08, 2024 06:09 PM
ADDED : ஆக 08, 2024 05:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து அனைத்து வழக்குகளும் ஒரே விஷயத்திற்காக பதிவு செய்யப்பட்டதா என பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.